உலகம்

ஜோ பைடனுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த மோடி !

ஜோ பைடனுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த மோடி !

jagadeesh

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். கொரோனா, பருவநிலை மாற்றம், இந்தோ- பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றபின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி அவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்திய அமெரிக்க உறவுக்கு பெரும் பாலமாக இருக்கும் இந்திய அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரிஸின் வெற்றி மிக பெரிய பெருமையும், ஊக்கமுமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு பைடன் நன்றி தெரிவித்தார். கோவிட் உள்ளிட்ட விவகாரங்களுடன் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.