பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றடைந்தார்.
ஐரோப்பிய பயணத்தின் முதல் கட்டமாக சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் சென்றடைந்த நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டெஃபான் லோவன் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்பு அளித்தார். இதைத்தொடர்ந்து சுவீடன் வாழ் இந்தியர்கள் மோடியை சந்தித்தினர். அடுத்து ஃபின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நார்டிக் நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.
இதைத்தொடர்ந்து சுவீடன் மன்னரையும் மோடி சந்திக்கிறார். சுவீடன் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை பிரிட்டன் செல்லும் பிரதமர் அங்கு நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வையும் மோடி சந்திக்கிறார். இதற்கிடையில் இந்தியா தலைமையிலான சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியில் பிரிட்டன் இணைவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெர்மனி செல்லும் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லை சந்தித்து பேசுகிறார்.