உலகம்

நடுவானில் 40 நிமிடம் சுயநினைவை இழந்த விமானி!

நடுவானில் 40 நிமிடம் சுயநினைவை இழந்த விமானி!

webteam

விமானம் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் விமானி 40 நிமிடம் சுயநினைவை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் போர்ட் அகஸ்டாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று அடிலெய்ட்டு நகருக்கு கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. சுமார் 5, 500 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த இந்த விமானம் அடிலெய்ட் நகரில் உள்ள பயிற்சி பள்ளிக்குச் சொந்தமானது. இதை பயிற்சி விமானி ஒருவர் ஓட்டிச் சென்றார். 

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானிக்குத் தலைவலி ஏற்பட்டது. தானியங்கி மோடை இயக்கிவிட்டபின் மயங்கிவிட்டார். சுமார் 40 நிமிடம் என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியாது. விமான போக்குவரத்து துறையினர் அவரிடம் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், மற்றொரு விமானம் மூலம் சென்று பார்த்தபோது அவர் சுயநினைவின்றி இருப்பது தெரிய வந்தது. பிறகு ஒரு வழியாக, அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை, விசாரணை நடத்தியது. அதில் அந்தப் பயிற்சி விமானி, காலையில் சாப்பி டவில்லை என்பது தெரியவந்தது. ஒரு சாக்லெட்டும் கொஞ்சம் தண்ணீரும் மட்டுமே குடித்துள்ளார். முந்தைய நாள் இரவு சரியாகத் தூங்க வில்லை. உடல் அசதியாக இருந்திருக்கிறது. இதனாலேயே, அவர் விமானத்துக்குள் மயங்கிவிட்டார் என்று விசாரணையில் தெரியவந்தது. 

பயிற்சி விமானிகளுக்குப் போதிய தூக்கம் அவசியம் என்றும் அந்த விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.