உலகம்

வெடித்துச் சிதறிய டால் எரிமலை - விமானங்கள் பறக்க தடை

வெடித்துச் சிதறிய டால் எரிமலை - விமானங்கள் பறக்க தடை

jagadeesh

லுசான் தீவில் அமைந்துள்ள டால் எரிமலை திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து 50 கிலோ ‌மீட்டர் தொலைவில் உள்ள லுசான் தீவில் அமைந்துள்ளது டால் எரிமலை. கடந்த சில நாட்களாக குமுறிக்கொண்டிருந்த இந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியதால் ‌சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு புகை வெளியேறிய வண்ணம் உள்ளது.

தீப்பிழம்பில் இருந்து வெளியேறி வரும் சாம்பல், அருகில் உள்ள நகரங்களின் மீதும் படர்ந்துள்ளது. ‌இந்தச் சாம்பலால் மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி அந்த எரிமலையைச் சுற்றி வசிக்கும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினரை வெளியேறும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து எரிமலையின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாகவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்னர் எச்சரிக்கை விடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். எரிமலையிலிருந்து தீக்குழம்பு வெளியேறுவதால் குறிப்பிட்ட பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுள்ளது. அடுத்த சில வாரங்களில் டால் எரிமலை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் எரிமலையை ஆய்வு செய்த குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் எரிமலையை சுற்றியிருந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.