உலகம்

சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததால் 36 பேரைக் கொன்ற கொடூரன்

சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததால் 36 பேரைக் கொன்ற கொடூரன்

webteam

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் சூதாட்டத்தில் தோன்ற நபர் 36 பேரை துப்பாக்கியால் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதல் நடத்தியவரின் பெயர் 42 வயதான ஜெசி கார்லோஸ் ஜேவியர் என்று தெரியவந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அவர், அதே சூதாட்ட விடுதியின் நிரந்தர வாடிக்கையாளர். இவர் ஏற்கனவே பலமுறை இங்கு சூதாடி, ஏராளமான பணத்தை இழந்த வெறியில் இந்த கொலைவெறி தாண்டவத்தில் ஈடுபட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. சூதாடுவதற்காக நிறைய பேரிடம் பெரும் தொகையை கடனாகப் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இந்த விபரீத முடிவில் அவர் இறங்கியதாக ஜெசி கார்லோஸ் ஜேவியர் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் 'லோன்உல்ஃப்' என்னும் தற்கொலைப் படையினர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்ததாகவும் அந்த விடுதியில் இருந்த பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் முன்னர் தெரிவித்தனர். ஆனால் தீவிர விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சூதாட்டக்காரர் என்பதும், சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததால் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தியதும் தெரியவந்தது.

சம்பவம் நடந்த ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா என்னும் அந்த சூதாட்ட விடுதியில் தற்காலிகமாக மூடப்படுவதாக அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த விடுதிக்கு சீல் வைத்ததுடன் அந்த பகுதிக்குள் வெளிநபர்கள் நுழையவும் தடை விதித்தனர். மேலும் அந்த விடுதியில் இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா சூதாட்ட விடுதியில் நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் அல்ல என மணிலா நகர காவல்துறை தலைவர் உறுதிப்படுத்தினார்.