அண்டார்டிகாவில் சுற்றுலா பயணிகளின் படகில் ஏறி திமிங்கலடைத்திடமிருந்து உயிர் பிழைத்துள்ளது பெங்குயின் ஒன்று. அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. நீரில் வாழும் பறக்காத பறவை இது.
“இந்த காட்சியை நேரில் பார்க்க ரொம்பவே பிரம்மிப்பாக இருந்தது. டிவியில் டிஸ்கவரி சேனல் பார்ப்பதை போல இருந்தது. அந்த கொலைகார திமிங்கலத்திடமிருந்து பெங்குயின் தப்பி பிழைத்தது சந்தோஷத்தை கொடுத்தது. இல்லையென்றால் அது அந்த திமிங்கலத்திற்கு இரையாகி இருக்கும்” என அந்த காட்சிகளை கேமராவில் பதிவு செய்த பயண ஆர்வலர் மேட் கார்ஸ்டென்.
அந்த வீடியோவில் பெங்குயின் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை முயற்சி செய்து கடைசியாக படகில் ஏறியதும் சுற்றுலா பயணிகள் கூக்குரல் இட்டனர். சிறிது நேரம் அந்த படகில் தஞ்சமடைந்த பெங்குயின் பிறகு நீரில் குதித்து பறந்தது.