சோலார் விமானத்தில் 5,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து இளைஞர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரஃபேல் டோம் ஜான் என்பவர், கடந்த 2014ம் ஆண்டு முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய குட்டி விமானம் ஒன்றை வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். இந்த நிலையில், பறக்கும் சூரிய சக்தி விமானத்தில் இருந்து முதலில் குதித்த மனிதர் என்ற சாதனை படைக்க அவர் திட்டமிட்டார்.
இதனையடுத்து பைரன் விமானப்படை தளத்தில் இருந்து சக விமானிகளுடன் புறப்பட்ட டோன் ஜான், 1,520 மீட்டர் (கிட்டத்தட்ட 5,000 அடி) உயரத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதித்தார். வெற்றிகரமாக தரையில் வந்து இறங்கிய ஜானுக்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
சூரிய சக்தி மூலம் இயங்கும் சிறிய விமானத்தில் கூட சாதனைகளை செய்ய முடியும் என்று இளைஞர்களுக்கு உணர்த்தவே இந்த முயற்சி மேற்கொண்டதாக டோம் ஜான் தெரிவித்துள்ளார்.