உலகம்

அமெரிக்காவின் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது: பாகிஸ்தான் வருத்தம்

அமெரிக்காவின் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது: பாகிஸ்தான் வருத்தம்

webteam

பாகிஸ்தான் தொடர்பாக அமெரிக்கா கூறிவரும் கருத்துக்கள் ஏமாற்றம் அளிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷாகித் அப்பாஸி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் கோடிக்காணக்கான பணத்தை நிதியுதவியாகப் பெற்று பொய் கூறுவதாகவும், தீவிரவாதச் செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, இதுவரை தங்களின் சொந்த வளங்களை வைத்தே பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.

இதற்காக பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் மற்றம் பாதுகாப்புப் படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த இழப்புகளுக்கு அமெரிக்கா பதிலளிக்க வேண்டும் என்றும், பொருளாதார மதிப்பைச் சுருக்கி பாகிஸ்தானை புறந்தள்ளிவிட முடியாது என்றும் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒத்துழைப்பால் ஆப்கானிஸ்தானில் அல்-கய்தா இயக்கத்தை ஒடுக்க முடிந்தது என அவர் கூறினார்.