உலகம்

கொரோனா பாதித்தவர்களை ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தள்ளும் பாகிஸ்தான்

கொரோனா பாதித்தவர்களை ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தள்ளும் பாகிஸ்தான்

webteam

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை அந்நாட்டு அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ஏராளமானோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் ராணுவ முகாம்கள் அதிகம் உள்ளதால், ராணுவ வீரர்களை கொரோனா வைரஸ் தாக்கிவிடுமோ என்று பாகிஸ்தான் அரசு அஞ்சுகிறது.

இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மூடப்பட்ட வண்டிகளில் அடைத்துச் கொண்டுசென்று, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இறக்கிவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதால், அங்கு விடப்படும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களால் உள்ளூர் மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், வேண்டாதவற்றை போடும் குப்பைத் தொட்டி போல தங்களை பாகிஸ்தான் கருதுவதாக, காஷ்மீரின் ஒரு பகுதி மக்கள் கொந்தளித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை வேறு பகுதிக்கு அழைத்துச்செல்லுமாறும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.