உலகம்

இலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்!

இலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்!

webteam

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்ததற்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் அறிவியல் அமைச்சர் பவத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2009-ம் ஆண்டு கிரிக்கெட் ஆடியது. அப்போது இலங்கை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி சர்வதேச
கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது.

(தாக்குதல் நடந்தபோது)

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி, 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்க விரும்பவில்லை என்று இலங்கை டி20 அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா, தனஞ்செய டிசில்வா, அகிலா தனஞ்செயா, லக்மல், சண்டிமல், டிக்வெல்லா, குசால் பெரேரா, கருணாரத்னே ஆகிய 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி, பாகிஸ்தான் செல்லுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாகிஸ்தான் அறிவியல் அமைச்சர் பவத் சவுத்ரி, இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர மறுத்ததற்கு இந்தியா தான் காரணம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், ’’இலங்கை வீரர்கள், பாகிஸ்தான் செல்வதை தவிர்க்காவிட்டால் ஐபிஎல்- தொடரில் இருந்து நீக்கப்படு வார்கள் என்று இந்தியா மிரட்டியதை அடுத்துதான், அவர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுத்துள்ளனர். இத் தகவலை வர்ணனையாளர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இது மலிவான உத்தி. விளையாட்டில் இருந்து விண்வெளி வரை இந்தியா நாட்டை முன்னிலைப்படுத்துவது கண்டிக்க வேண்டிய ஒன்று. இது இந்திய விளையாட்டு ஆணையத்தின் மலிவான செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.