பாகிஸ்தானின் புதிய பிரதமராக வாய்ப்புள்ள இம்ரான்கான், காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
272 இடங்களுக்கு நடைபெற்ற பாகிஸ்தான் தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி120-க்கும் மேலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் பிரதமராகும் வாய்ப்பு இம்ரான்கானுக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள இம்ரான்கான், இந்தியாவுடன் பாகிஸ்தான் நட்புணர்வோடு இருக்க விரும்புவதாகவும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.