உலகம்

ஓசோனில் இருந்த மிகப்பெரிய துளை அடைபட்டது?: பொதுமுடக்கம் காரணமா?

ஓசோனில் இருந்த மிகப்பெரிய துளை அடைபட்டது?: பொதுமுடக்கம் காரணமா?

webteam

ஓசோன் படலத்தில் இருந்த மிகப்பெரிய துளை அடைபட்டுவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியில் படாத வண்ணம் பாதுகாப்பதே ஓசோன் படலம். கடந்த மாதம் ஆர்க்டிக் பகுதிக்கு மேலே ஓசோன் படலத்தில் மிகப்பெரிய துளை ஏற்பட்டிருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

வடதுருவ பகுதியில் நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாகவே இவ்வளவு பெரிய துளை ஏற்பட்டதாக கூறிய விஞ்ஞானிகள் இது தென் துருவம் வரை பரவும் என எச்சரித்திருந்தனர். சுமார் ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு ஓசோன் படலத்தில் இந்த துளை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஓசோன் படலத்தில் இருந்த மிகப்பெரிய துளை அடைபட்டுவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


கொரோனாவால் உலகெங்கும் ஆலைகள் இயங்குவது தடைபட்டுள்ளது, போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் குறைந்து துளை அடைப்பட்டதா என்றால், அது காரணமில்லை, போலார் வோர்டெக்ஸ் எனப்படும் துருவ சுழலே காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.