உலகம்

காதலியை கொன்ற வழக்கில் தடகள வீரருக்கு 13 ஆண்டுகள் சிறை

காதலியை கொன்ற வழக்கில் தடகள வீரருக்கு 13 ஆண்டுகள் சிறை

webteam

காதலியைக் கொன்ற வழக்கில், மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்-க்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த ‌சிறைதண்டனை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு தனது காதலியை சுட்டுக் கொன்றதற்காக தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்-க்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பிஸ்டோரியஸ்-க்கு 6 ஆண்டுகள் என்பது குறைவான தண்டனை என்பதால், 15 ஆண்டுகள் தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பில் தென்னாப்ரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், ஆஸ்கர் பிஸ்டோரியஸ்-க்கான சிறை தண்டனையை 13 வருடங்கள் 5 மா‌தங்கள் என உயர்த்தி உத்தரவிட்டது.