உலகம்

ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவு - அமெரிக்கா

ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவு - அமெரிக்கா

webteam

ரஷ்யாவிற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எதிராகவும் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 

இந்த மசோதாவுக்கு அதிபர் டெனால்டு  டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா 
அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடியாக ரஷ்யாவில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அமெரிக்காவின் சான் பிராசிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் செயல்படும் ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.