அமெரிக்காவில் ஆக்டோபஸ் ஒன்று தூங்கும் போது தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வில் ஈடுபடும் கல்லூரி பேராசிரியரான டேவிட் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இரவு நேரத்தில் டேங்கின் மேல்பகுதிக்கு வந்து அந்த ஆக்டோபஸ் தூங்குகிறது. தூக்கத்தின் போது அதன் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது.
இதற்கு முன்பு இப்படி ஒரு நிகழ்வை கண்டதில்லை என வியப்பு தெரிவித்துள்ள டேவிட், தூக்கத்தில் நண்டைப் பிடிப்பது போல அந்த ஆக்டோபஸ் கனவு கண்டிருக்கலாம். நண்டைக் காணும் போது ஒரு நிறத்திலும் வேட்டைக்கு தயாராகும் போது ஒரு நிறத்திலும் ஆக்டோபஸ் இருக்கும். அதே போல் கனவு காண்பதால் தூக்கத்திலும் தன் நிறத்தை இந்த ஆக்டோபஸ் மாற்றி இருக்கும் என அவர் தெரிவித்தார்.