உலகம்

''மண்டியிட்டு வேண்டினேன். ஆனாலும் துப்பாக்கி சத்தம் ஒலித்தது'' வைரலான கன்னியாஸ்திரி!

''மண்டியிட்டு வேண்டினேன். ஆனாலும் துப்பாக்கி சத்தம் ஒலித்தது'' வைரலான கன்னியாஸ்திரி!

webteam

மியான்மரில் ஆங் சாங் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் 83 சதவீத வாக்குகளை பெற்று மீண்டுமொரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறி, ராணுவத்தால் ஆங் சாங் சூச்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை ராணுவம் கையாண்டு வருகிறது. போராட்டக்காரர்கள் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கன்னியாஸ்திரி ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நு, போலீசாரிடம் மண்டியிட்டு கைகூப்பி குழந்தைகளுக்கு எதிராகவும், குடியிருப்பு வாசிகளுக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள். என கெஞ்சி வேண்டுவதாக அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. ஆனால் அவர் மண்டியிட்டு வேண்டுக்கொண்ட அடுத்த சில மணிகளில் துப்பாக்கிச் சத்தம் வெடிக்கத் தொடங்கியதாகவும், அந்த இடம் ரத்தம் படிந்துவிட்டதாகவும் கன்னியாஸ்திரி தெரிவித்தார்.

இது குறித்து ராய்ட்டர்ஸ்க்கு தொலைபேசியில் பேசிய கன்னியாஸ்திரி, யாரையும் காயப்படுத்த வேண்டாமென நான் போலீஸாரை கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். குடும்ப உறுப்பினர்களை போல பாவியுங்கள் என கேட்டுக்கொண்டேன். உறுதி அளியுங்கள். அல்லது என்னை கொன்றுவிடுங்கள் என்று கூறினேன்.ஆனால் துப்பாக்கிச் சத்தம் எனக்கு கேட்டது. சாலைகளில் ரத்தம் ஓடியது” எனக் கூறினார்.