உலகம்

அணு ஆயுத போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் : வடகொரியா பகீர்

அணு ஆயுத போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் : வடகொரியா பகீர்

webteam

அமெரிக்காவுடன் அணு ஆயுத போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று, வட கொரியாவின் துணை தூதர் கிம் இன் ரியோங் பகிரங்கமாக கூறியுள்ளார். 

வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, வடகொரியாவில் ஊடுருவ முயல்வதாகவும் தொடர்ந்து குற்றசாட்டு வைக்கப்பட்டு வந்தது.  இதனிடையே அவ்வப்போது வடகொரியாவும் அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக செய்து உலக நாடுகளுக்கு சவால் விட்டது. அதே போல் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் இன் ரியோங்கும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக சர்சையான கருத்துக்களை கூறி வந்தனர். 

இந்நிலையில் அமெரிக்காவுடன் அணு ஆயுத போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும், ஒட்டு மொத்த அமெரிக்காவும் வடகொரியாவின் தாக்குதல் வட்டத்திற்குள்தான் உள்ளனது என்றும் ரியோங் கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா எங்கள் நாட்டின் எல்லைக்குள் ஒரு அடி எடுத்து வைத்தாலும், எங்களின் கடுமையான தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.