வடகொரியா அண்மையில் நடத்திய நீண்ட தூர ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை வியாழக்கிழமை அவசர ஆலோசனை நடத்தவுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை அமெரிக்காவின் ஒருபகுதியை தாக்கும் தொலைதூர திறன் கொண்டது என்பதால், ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை நீண்ட தூரம் பாய்ந்து துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணையை சோதனை செய்தது.
இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குத்ரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு சபையின் விதிகளை மீறிய செயல் இது என அவர் வடகொரியாவை கண்டித்துள்ளார்.