உலகம்

ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

webteam

அணு ஆயுத ஒழிப்பிற்காக போராடி வரும் ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

நார்வே நாட்டு தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐகேன் அமைப்பின் இயக்குநர் பியாட் ரிஸ்ஃபின் நோபல் பரிசுக்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார். ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு ஐகேன் அமைப்பு இயங்கி வருகிறது. இது 101 நாடுகளை சேர்ந்த 468 தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பாகும். 

அணுஆயுதத் தடை ஒப்பந்தம் ஒன்றினை இந்த அமைப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்தது. இதில் 122 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தச்சூழலில் ஐகேன் அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது