நயாகரா அருவியில் எந்தவித பாதுகாப்புமின்றி குதித்து உயிர்பிழைத்த நபர், மற்றுமொரு சாதனை முயற்சியின் போது உயிரிழந்தார்.
கடந்த 2004 அம் ஆண்டு நயாகரா அருவியில் முதல் முறையாக உரிய பாதுகாப்பு உபகரணமின்றி குதித்து, காயங்களோடு உயிர்பிழைத்தவர் அமெரிக்காவை சேர்ந்த கிர்க் ஜோன்ஸ். 53வயது நிரம்பிய இவர், மற்றுமொரு சாதனை படைக்க விரும்பி, எந்தவித பாதுகாப்பு உபகரணமும்
இன்றி, ஏப்ரல் 19ஆம் தேதி நயாகரா அருவியின் மேற்பகுதியிலிருந்து, இன்பிஃளேட்டபில் பந்திலிருந்து குதித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி அருவிலியிருந்து சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் ஜோன்ஸின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜோன்ஸ் பயன்படுத்திய காலியான பந்து மட்டுமே கிடைத்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.