உலகம்

இந்தோனேசிய விமான விபத்து... அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள்...!

இந்தோனேசிய விமான விபத்து... அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள்...!

Rasus

இந்தோனேசியாவில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானம் பறப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29-ஆம் தேதி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 189 பயணிகளுடன் பங்கல் பினாங் நோக்கி புறப்பட்டுச் சென்ற லயன் ஏர் விமானம் நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த சிப்பந்திகள், பயணிகள் என 189 பேரும் உயிரிழந்தனர். முதற் கட்ட விசாரணையில் வேகம் குறைவாக பறந்ததே விபத்து ஏற்பட காரணம் என தெரியவந்தது.

இந்நிலையில், பறப்பதற்கு தகுதியற்ற நிலையில் அந்த விமானம் இருந்தது என்றும், இதன் காரணமாகவே விபத்தில் சிக்கியது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அறிந்திருந்தும் விமானி, விமானத்தை செலுத்த முடிவெடுத்ததும் விபத்துக்கு மற்றொரு காரணம் என இந்தோனேசிய தேசிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் தலைவர் நுர்காயோ தெரிவித்துள்ளார்.