திருநங்கை பிங்கி - திருநம்பி சுரேந்திர பாண்டே இணையர்  Twitter
உலகம்

தன்பாலின தம்பதியின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய நேபாள உச்சநீதிமன்றம்!

தன்பாலின சேர்க்கை திருமணத்தை அங்கீகரித்து நேபாள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தெற்காசிய நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு நேபாளம் என்ற நிலை உருவாகியுள்ளது.

PT WEB

நேபாளத்தை சேர்ந்த திருநங்கை பிங்கி என்பவர் திருநம்பி சுரேந்திர பாண்டே என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர்களது திருமணத்தை பதிவு செய்ய அரசு தரப்பில் முதலில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரி பிங்கி - சுரேந்திர பாண்டே தம்பதி வழக்கு தொடர்ந்தனர்.

திருநங்கை பிங்கி - திருநம்பி சுரேந்திர பாண்டே இணையர்

ஆனால் இதனை விசாரித்த காத்மண்டு மாவட்ட நீதிமன்றம் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவிட்டது. இதனால் பிங்கி-சுரேந்திர பாண்டேவின் திருமணத்துக்கான அங்கீகாரம், மீண்டும் மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கி நேபாள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து மேற்கு நேபாளத்தில் உள்ள தோர்தி நகராட்சி நிர்வாகம் பிங்கி-சுரேந்திர பாண்டே தம்பதியின் தன்பாலின திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்தது. திருமணத்தை பதிவு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தன்பாலின தம்பதியினர் கூறியுள்ளனர்.