உலகம்

வெள்ளை மாளிகை தலைமை நிர்வாகியாகும் இந்தியர்

வெள்ளை மாளிகை தலைமை நிர்வாகியாகும் இந்தியர்

webteam

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நியோமி ராவ் வாஷிங்டனின் வெள்ளை மாளிகையின் நிர்வாக தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளார். 

இவர் அமெரிக்க நாட்டில் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிற ஆன்டனின் ஸ்காலியா சட்டக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் அவர் உயர் பட்டமும் பெற்றுள்ளார். இவரை வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகியாக டிரம்ப் தற்போது நியமித்துள்ளார். வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் நியோமி ராவிடம் இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்படுகிறது. இவர் இதற்கு முன்பாக ஜார்ஜ் புஷ் அரசில் இணை ஆலோசகராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.