உலகம்

நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

webteam

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவண ஊழல் வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு வெளியே வர முடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து நவாஸை நீக்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றங்களில் நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் இஸ்லாமாபாத் நீதிமன்றத்‌தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக நவாஸ் ஷெரீஃப் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் 9ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்த நீதிமன்றம், நவாஸின் மகள் மரியம், அவரது மகன்கள் உசேன் மற்றும் ஹஸன், மருமகன் முகமது சப்தார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.