சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அதிபரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
இந்தோனேசியா, மலேசியாவை தொடர்ந்து, மூன்று நாடுகள் பயணத்தின் கடைசியாக சிங்கப்பூர் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் லீ சீயன் லூங்கை இன்று சந்தித்தார். இஸ்தானா மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, வணிகம், முதலீடு, தொடர்பு, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் ஆகியவற்றில், இந்தியா - சிங்கப்பூர் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவு குறித்து விவாதித்தனர்.
இரு தலைவர்களும் இரு தரப்பு நல்லுறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, சிங்கப்பூர் அதிபர் ஹாலிமாஹ் யாகோப்-பை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். அதிபர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.