உலகம்

ட்ரம்பின் கருத்தால் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த மெக்சிகோ அதிபர்..!

ட்ரம்பின் கருத்தால் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த மெக்சிகோ அதிபர்..!

webteam

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் டுவிட்டர் பதிவினை தொடர்ந்து, தனது அமெரிக்க பயணத்தை மெக்சிகோ அதிபர் பீனா நீட்டோ ரத்து செய்து அறிவித்துள்ளார்.

அமெரிக்கா-மெக்சிகோ இடையில் சுமார் 3,200 கி.மீ. நீளத்துக்கு எல்லைப்பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும், அதற்கான செலவை மெக்சிகோ ஏற்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். சுவர்கள் மீது மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த மெக்சிகோ அதிபர் பீனா நீட்டோ, ஒருகாலத்திலும் அதற்கான செலவை ஏற்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

எல்லையைப் பாதுகாக்கும் சுவருக்கான செலவை ஏற்க விருப்பமில்லை எனில் உங்களின் அமெரிக்க பயணத்தை ரத்து செய்துவிடுங்கள் என்று மெக்சிகோ அதிபர் பீனா நீட்டோவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிந்திருந்தார். டொனால்ட் ட்ரம்ப்பின் இத்தகைய பதிவினை தொடர்ந்து மெக்சிகோ அதிபர் பீனா நீட்டோ, அவரது அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார்.

பீனா நீட்டோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வாஷிங்டனில் வரும் 31-ஆம் தேதி சந்திக்கத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.