உலகம்

போலி செய்தி வெளியிட்டால் 10 ஆண்டுகள் சிறை: மிரட்டும் மசோதா!

போலி செய்தி வெளியிட்டால் 10 ஆண்டுகள் சிறை: மிரட்டும் மசோதா!

webteam

போலிச் செய்திகளுக்கு எதிரான மசோதா மலேசிய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

போலிச் செய்திகளை ஒழிக்கும் வகையில் மலேசியாவில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதாவில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில், உலகம் முழுவதும் போலிச் செய்திகள் தொடர்பான கவலை எழுந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  எனினும் புதிய சட்டத்தைப் பயன்படுத்தி, எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சி செய்யக்கூடும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

இந்த மசோதா நிறைவேறினால், மலேசியாவில் போலிச் செய்திகளை வெளியிடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுமார் 80 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும்.