இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் சொகுசு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் நிறைந்த யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து கொழும்புக்கு முதல் சொகுசு ரயில் புறப்பட்டுச்சென்றது.
இலங்கையின் வடக்கு முனையான காங்கேசன் துறையிலிருந்து தலைநகர் கொழும்புவுக்கு 386 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இந்த ரயில் சென்றடைந்தது. இதில் பயணித்த இலங்கை போக்குவரத்து அமைச்சர் பவித்ர வன்னியராச்சியை கொழும்புவில் இந்திய தூதர் வரவேற்றார். இதன் மூலம் இலங்கையுடனான நமது உறவில் மேலும் மைல் கல் எட்டப்பட்டுள்ளது என அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயிலை இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரைட்ஸ் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்திய அரசின் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்த ரயில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.