ஐக்கிய அரபு அமீரகத் தலைநகரமான அபுதாபியில் குளிர்காலம் தொடங்கியவுடன் வீடுகளுக்கு வெளியே பால்கனியில் அமர்ந்து பொழுதைக் கழிப்பது மக்களின் வழக்கமாக இருந்துவருகிறது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளை பால்கனியில் அமரவிடவேண்டாம், அவர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அபுதாபி காவல்துறை நகர மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பான மக்களை எச்சரிக்கும் வீடியோ ஒன்றை காவல்துறை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது. ஆபத்தான நகரக்கூடிய பர்னிச்சர்களை பால்கனியில் வைக்கவேண்டாம். கதவுகளை திறந்தநிலையில் வைக்கவேண்டாம். குழந்தைகளை கவனிப்பாரற்றுவிடவேண்டாம் எனவும் பல எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
"எப்போதும் குழந்தைகளிடம் ஒரு கண் வையுங்கள். பர்னிச்சர் மற்றும் ஜன்னல்களிடமிருந்து குழந்தைகளை விலக்கிவையுங்கள். ஜன்னல்கள் மற்றும் கதவுகளைப் பூட்டிவையுங்கள்" என்று அந்த வீடியோவில் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.