உலகம்

கென்னடி கொலை தொடர்பான 2,800 ஆவணங்கள் வெளியீடு

கென்னடி கொலை தொடர்பான 2,800 ஆவணங்கள் வெளியீடு

webteam

அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி கொலை தொடர்பான 2‌ ஆயிரத்து 800 ஆவணங்களை வெளியிட தற்போதைய அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனினும் தேசிய பாதுகாப்பு கருதி சில ரகசிய ஆணவங்களை வெளியிடுவதற்கு ட்ரம்ப‌ மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அந்த ஆவணங்களில் என்ன தகவல்கள் இட‌ம் பெற்றுள்ளன என்பதை தெரிவிக்க தேசிய ஆவண காப்பகம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 54 ஆண்டுகளுக்கு முன் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டது முதல், இந்த கொலைக்கான நோக்கம் குறித்து பல்வேறு வதந்திகள் வலம் வந்தபடி உள்ளன.

இதனால் அதிபராக பொறுப்பேற்றது‌ம் கொலை தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அதிபர்‌ ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி அந்த ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இந்த ஆவணங்களை வைத்து வதந்தி‌களு‌க்கு எந்த முற்றுப்புள்ளியும் வைக்க முடியாது என விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை இயக்குநர் லேரி சபாதோ கருத்து தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்ட அந்த ஆவணங்களில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை‌ என்றும் இதன் மூலம் கொலைக்கான காரணம் தொடர்பாக எந்தவொரு முடிவுக்கும் வந்துவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.