உலகம்

அமெரிக்காவில் கவர்னராக ஒருபால் ஈர்ப்பாளர் முதல்முறை தேர்வு

அமெரிக்காவில் கவர்னராக ஒருபால் ஈர்ப்பாளர் முதல்முறை தேர்வு

webteam

அமெரிக்காவில் முதன்முறையாக ஒருபால் ஈர்ப்பாளரான ஜார்டு பொலிஸ் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸை சேர்ந்த ஜார்டு பொலிஸ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வால்டர் ஸ்டேப்லிடனை விட ஆறு புள்ளிகள் அதிகம் பெற்று
வெற்றி பெற்றுள்ளார்.  

பொலிஸ், 2009 ஆம் ஆண்டு ஒரு ஜனநாயக கட்சியில் முதல் பிரதிநிதிகள் சபையில் பணியாற்றியுள்ளார். மேலும் 2008 ஆம் ஆண்டு
பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 67 சதவீத வாக்குகள் பெற்று மிகப்பெரிய அளவில் மார்க் உடேலை தோற்கடித்து வெற்றி பெற்றார். 

இதேபோல் 2010 ஆம் ஆண்டு மறுத்தேர்தலிலும் 57 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில்
நின்று 57 சதவீத வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்.  

இந்நிலையில், தற்போது, உலகளாவிய சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் மற்றும் துப்பாக்கி வன்முறை தடுப்பு போன்ற
முற்போக்கு காரணங்களை வைத்து பிரச்சாரம் செய்த பொலிஸ் 51.6% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் தனது
அரசியல் வாழ்க்கையில் தனது பாலினம் குறித்து வெளிப்படையாக தெரிவித்தவர் பொலிஸ். 

இருபால் ஈர்ப்பாளராக அடையாளம் காணப்படும் ஓரிகோன் கோவ் கேட் பிரவுன் கடந்த 2015 ஆம் ஆண்டு கவர்னராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது ஒருபால் ஈர்ப்பாளரான பொலிஸ் கவர்னர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வேட்பாளர் ஆவார். 

LGBTQ வேட்பாளர்களை ஆதரிக்கும் நாடு தழுவிய நிறுவனமான விக்டர் ஃபண்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மேரி
பார்க்கர் கூறுகையில், 25 வருடங்களில் கொலரடோ மாநிலத்தில் ஒருபால் ஈர்ப்பாளர் ஒருவர் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதை
வெளிப்படையாக கூறுவது இதுவே முதன்முறை எனவும் இது வரலாற்று சிறப்புமிக்கது எனவும் தெரிவித்துள்ளார்.