உலகம்

அணு ஆயுத சோதனைக்கு பின் வடகொரியாவுக்கு செல்லும் ஜப்பான் எம்.பி.

அணு ஆயுத சோதனைக்கு பின் வடகொரியாவுக்கு செல்லும் ஜப்பான் எம்.பி.

webteam

ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீரரும், எம்.பி.யுமான அன்டோனியோ இனோகி, வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

அண்மையில் வட கொரியா அணுஆயுத சோதனை நடத்திய நிலையில், அந்நாட்டுக்கு ஜப்பான் எம்.பி. ஒருவர் செல்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வரும் 9-ம் தேதி நடைபெறும் வடகொரிய தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அன்டோனியோ இனோகி, முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இதனிடையே, விளையாட்டு கலாச்சார பரிமாற்றம் தொடர்பாக, வட கொரிய தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் கிம் ஜான் யுன் - உடன் பேசுவதே தமது பயணத்தின் பிரதான நோக்கம் என ஜப்பானில் இருந்து புறப்படும் முன் அன்டோனியோ இனோகி தெரிவித்துள்ளார்.