உலகம்

விண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய நுண்ணுயிருக்கு அப்துல்கலாம் பெயர்

விண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய நுண்ணுயிருக்கு அப்துல்கலாம் பெயர்

webteam

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ஐஎஸ்எஸ்-இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினத்துக்கு, அப்துல் கலாமின் பெயரை வைத்து நாசா விஞ்ஞானிகள் கௌரவப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படும் இந்த உயிரியினத்துக்கு ‘சொலிபாசில்லஸ் கலாமி’ என அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். பூமியில் இருந்து சமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐஎஸ்எஸ் விண்வெளி நிலையத்தில் வடிகட்டிகளில் ஒரு விதமான உயிரினம் உருவாகியிருப்பது நாசாவின் ஜெட் புரோலிபியன் லேபரட்டரி விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உயிரினம் பாக்டீரியா வடிவத்தில் உள்ளது.

இந்த உயிரினம் பூமியில் காணப்படவில்லை, விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரினத்துக்கு இந்தியாவின் மறைந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்களின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

இந்த உயிரினத்துக்கு அவர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சொலிபாசில்லஸ் கலாமி’. இந்த நுண்ணுயிர் கடந்த ஓராண்டுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் அளித்துள்ள பங்களிப்புகளை கவுரவிப்பதற்காக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அப்துல் கலாம், 1963 ஆம் ஆண்டு நாசாவில் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.