உலகம்

காஸாவில் அல் ஜஸீரா, அசோஷியட் பிரஸ் அலுவலகங்களின் கட்டடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

காஸாவில் அல் ஜஸீரா, அசோஷியட் பிரஸ் அலுவலகங்களின் கட்டடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

webteam

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் வான்வழி தாக்குதலை தொடுத்துவருகிறது. 

காஸாவில் சர்வதேச செய்தி நிறுவனமான அல் ஜஸீரா, அசோஷியட் பிரஸ் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாக்குதலுக்கு முன்பாக வந்த மிரட்டலை அடுத்து கட்டடத்தில் இருந்து அனைவரும் வெளியேறினர். இன்று நடந்த தாக்குதலில் ஏபி வெளியிட்ட தகவலின் படி 10 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இதில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லியுள்ளது.

முன்னதாக, திங்களன்று ஜெருசலேமில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்தே, இஸ்ரேல் மற்றும் காஸாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் இடையே மோதல் முற்றியது. மே 11ம் தேதி செவ்வாய் கிழமை நடைபெற்ற தாக்குதல்களில் கேரளப்பெண் உட்பட 35 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.