இஸ்ரேலில் இருந்து தினந்தோறும் பாய்ந்து வரும் ராக்கெட்டுகள் காஸாவில் உள்ள கட்டடங்களை துளைத்தெடுத்து வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கில் இறப்புகள் பதிவாகும் நிலையில் பல நூறு பேர் காயமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் காசாவில் குறிப்பிட்ட சில இலக்குகளில் பீரங்கித் தாக்குதலையும் நடத்தியுள்ளது. ஒரே நேரத்தில் ராக்கெட் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றரை லட்சம் மக்கள் அடர்த்தியாக வாழும் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது என்ற விமர்சனமும் ஒருபுறம் எழுந்து வருகிறது.