இஸ்ரேல் பிரதமர் pt desk
உலகம்

“சர்வதேச அளவில் எங்களுக்கு ஒத்துழைப்பு இருக்கு; ஹமாஸை அழித்து வெற்றிபெறுவோம்” - இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் அமைப்பை அழித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.

webteam

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஒரு வாரத்தை தாண்டி நீடித்து வருகிறது. இருதரப்பிலும் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5,000 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

காஸா இஸ்ரேல் போர்

அப்போது பேசிய அவர், “காஸா எல்லைப் பகுதியில் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் 1,300-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை வெறித்தனமாக கொன்று குவித்துள்ளனர். காஸாவில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு இருக்கிறது. ஹமாஸ் அமைப்பை உறுதியாக அழிப்போம். முன்னெப்போதும் இல்லாத வகையில் வலிமையாக போரை முடிவுக்கு கொண்டு வருவோம்” என சூளுரைத்தார்.