இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்படும் மூர்க்கமான தாக்குதலால் அப்பாவி பொதுமக்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பின், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.