உலகம்

அமெரிக்கத் தாக்குதலில் ஐஎஸ் தலைவர் உயிரிழப்பு?

அமெரிக்கத் தாக்குதலில் ஐஎஸ் தலைவர் உயிரிழப்பு?

webteam

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் - பக்தாதி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

’ஏதோ மிகப்பெரிய விஷயம் நடந்துள்ளது’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்ட பின்பு, இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர், அபுபக்கர் அல்-பக்தாதி. இந்த பயங்கரவாத அமைப்புக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆட்கள் சேர்க்கப்பட்டனர். ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை இந்த அமைப்பு, 2014 ஆம் ஆண்டு கைப்பற்றியது. அப்போது, இஸ்லாமிய தேசம் உருவாகிவிட்டதாக அல் பக்தாதி பேசும் வீடியோ வெளியானது. அதன்பின் அவர் தலைமறைவானார். அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகளின் தாக்குதலில் தங்கள் வசம் இருந்த பகுதிகளை, ஐஎஸ் அமைப்பு இழந்தது. இருந்தாலும் தலைமறைவாக இருந்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி வந்தனர். சமீபத்தில் இலங்கையிலும் இந்த அமைப்பினர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர்.

இந்நிலையில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அல்-பக்தாதி, 5 வருடங்களுக்குப் பிறகு, வீடியோவில் தோன்றி பேசினார். 18 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், இலங்கையில் எதற்காகக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அமெரிக்கப் படைகள் சிரியாவில் அவரை வலைவீசித் தேடிவந்தன. ரகசியமாக நடத்தப்பட்ட இந்த ஆபரே ஷனில், அவர் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்த அமெரிக்க படைகள், அவரைக் கொன்றுவிட்டதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.