உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என்றால் அது அமெரிக்க நாட்டின் அதிபர் பதவி தான் என்று சொல்லப்பட்டு வருகிறது.
கடந்த 1789 முதல் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேர்தலில் 1856 முதல் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியது. தொடர்ச்சியாக இந்த இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் தான் அதிபருக்கான அரியணையை அலங்கரித்து வருகின்றனர்.
2020 அதிபர் தேர்தலில் கூட குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் வேட்பாளராக உள்ளார்.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கருத்து கணிப்புகளின் படி அவரது கொரோனா கால செயல்பாட்டினால் ட்ரம்ப் இந்த தேர்தலில் தோல்வியை தழுவ வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படி நடந்தால் அதிபர் பதவியில் இருந்து தேர்தலை எதிர்கொண்டு தோல்வியை தழுவிய முன்னாள் அதிபர்களான ஜான் ஆடம்ஸ், ஜான் கிவின்ஸி ஆடம்ஸ், மார்ட்டின், குரோவர், பெஞ்சமின், வில்லியம், ஹூவர், ஜெரால்டு, ஜிம்மி கார்ட்டர், ஜியார்ஜ் எச்.டபள்யூ. புஷ் வரிசையில் ட்ரம்பும் இணையலாம்.
அதே நேரத்தில் 1993 தேர்தல் முதல் அதிபர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து இரண்டு முறை அந்த பதவியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.