சிரியாவின் டவுமாவில் ரசாயன தாக்குதல் நடந்ததாகச் சந்தேகப்படும் இடத்தில் சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி டவுமா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிரியாவும், ரஷ்யாவும் ரசாயன தாக்குதல் நடந்ததாகக் குற்றச்சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக, சிரியா அரசு தளங்களின் மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்நிலையில் டவுமா நகருக்குள் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடங்களைச் சோதனை செய்ய ஐ.நா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடந்த இடங்களில் சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு குழு ஆய்வு செய்தது. சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் நெதர்லாந்தின் நிஜ்ஸ்விஜ்க் நகரத்தில் உள்ள ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனத்தின் ஆய்விடத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன.