உலகம்

அபுதாபி லாட்டரியில் ரூ.13 கோடி: நம்பாமல் அடம் பிடித்த கேரளாக்காரர்!

அபுதாபி லாட்டரியில் ரூ.13 கோடி: நம்பாமல் அடம் பிடித்த கேரளாக்காரர்!

webteam

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ‘பிக் டிக்கெட்’ லாட்டரி குலுக்கல் நடந்தது. இதில் கேரள மாநிலம் காசர்கோடைச் சேர்ந்த முகமது குஞ்சு மய்யலாத் என்பவருக்கு 70 லட்சம் திர்ஹாம் பரிசாக விழுந்தது. இதன் இந்திய மதிப்பு, சுமார் 13 கோடி ரூபாய். இதை அவருக்குத் தெரிவித்தபோது அவரால் நம்பவே முடியவில்லை. யாரோ விளையாட்டுக்காக இப்படி சொல்வதாக நினைத்தார். பின்னர் அவர்கள் உறுதி படுத்திய பிறகு நம்பிய முகமது குஞ்சு பெருமகிழ்ச்சி அடைந்தார்.

இதையடுத்து சிகிச்சைக்கு பணமின்றி தவித்துக்கொண்டிருந்த அவரது நண்பர் அபூபக்கர் என்பவரின் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய இருக்கிறார். மேலும் கேரள அரசின் நிவாரண நிதிக்கும் கணிசமான தொகையை அளிக்கிறார். கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இவர் கடந்த 15 வருடமாக அபுதாபியில் பணியாற்றி வருகிறார். 

‘அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி வாங்குவேன். இப்போது எனக்காக வாங்கினேன். பரிசு கிடைத்துள்ளது. என்னுடன் இங்கு பணியா ற்றியவர் அபு பக்கர். அவருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது. அவரை காப்பாற்ற உதவுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார் முகமது குஞ்சு.