லண்டன் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுபாதை அமைக்க மிகக்குறைந்த செலவில் திட்ட மதிப்பீடு கொடுத்த இந்தியரை அந்நாட்டு அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
லண்டனில் உள்ள முக்கியமான விமானநிலையங்களில் ஒன்றான Heathrow விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்த விமான நிலையத்தில் 3-வது விமான ஓடுபாதை அமைக்க விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்து முறையான தகவல் அளிக்கப்பட்டதும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது திட்ட மதிப்பினை கொடுத்துள்ளனர். இந்நிலையில் இந்திய வம்சாவழியை சேர்ந்த சுரீந்தர் அரோரா என்ற தொழிலதிபர் மிகக்குறைந்த செலவில் திட்ட மதிப்பீடு கொடுத்து அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அரோரா குழுமத்தின் நிறுவனரான இவர் கொடுத்த மதிப்பு, தற்போதுள்ள திட்டமதிப்பை விட 5 பில்லியன் பவுண்டுகள் குறைவாகவே உள்ளதால் அந்நாட்டு அதிகாரிகள் அவரை பாராட்டியுள்ளனர்.