உலகம்

பாகிஸ்தான் மக்களுக்கு உதவிய இந்தியத் தொழிலதிபர்

பாகிஸ்தான் மக்களுக்கு உதவிய இந்தியத் தொழிலதிபர்

webteam

இந்தியத் தொழிலதிபர் ஒருவர் பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகானத்திற்கு 62 தண்ணீர் பம்புகள் மற்றும் உணவு பொருட்களை அளித்துள்ளார். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிறைந்திருந்த போதிலும் இந்தியத் தொழிலதிபர் ஒருவர் பாகிஸ்தான் சிந்து மாகானத்திலுள்ள ஒரு மாவட்டத்திற்கு அரிய உதவியை செய்துள்ளார். இந்தியாவை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜோகிந்தர் சிங் சலாரியா. இவர் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் யுஏஇயில் வசித்து வருகிறார். இவர் அங்கு போக்குவரத்து தொழில் பார்த்து வருகிறார். இவர் பாகிஸ்தான் சிந்து மாகானத்திலுள்ள ஒரு மாவட்டத்தில் மக்களின் வறுமை நிலையை யுடியூப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளார். 

இதனையடுத்து சலாரியா அங்குள்ள சமூக ஆர்வலரை தொடர்பு கொண்டு 62 தண்ணீர் பம்புகள் மற்றும் அங்குள்ள மக்களின் உணவிற்கு தேவையான சில உணவு பொருட்களையும் நன்கொடையாக அளித்துள்ளார். இதன்மூலம் அவர் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகானத்தில் 87 சதவிகித மக்கள் வறுமையில் உள்ளனர். அத்துடன் அந்த மாகானத்தில் மக்கள் பல அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.