கலிபோர்னியாவில் கடந்த ஒரு வாரத்தில் 10 லட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிரையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காடுகள் தான் பூமியின் பாதுகாவலர்கள்.காடுகள் மூலமாகவே பூமி அதிக வெப்பமடையாமல் இருக்கிறது. காடுகள் அழிந்தால் பூமியில் வெப்பநிலை உயரும், பனிக்கட்டி உருகும், கடல்மட்டம் உயரும் என அடுத்தடுத்த அழிவுகள் தொடங்கும். இப்படி விதையிலிருந்து செடிமுளைத்து, இலை விட்டு வளர்ந்து வரும் மரங்கள் நொடிப்பொழுதில் எரிந்து சாம்பாலாகின்றன. காரணம் காட்டுத்தீ.
பல ஆண்டுகால தாவரங்களை காட்டுத்தீ சில மணி நேரங்களில் கரியாக்கி விடுகிறது. மரங்களோடு சேர்ந்து பல விலங்குகளும் செய்வதறியாது தீயில் கருகுகின்றன. மனித தவறுகள், இயற்கையின் செயல் என காடுகளில் காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்நிலையில் கலிபோர்னியாவில் கடந்த ஒரு வாரத்தில் 10 லட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிரையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வன ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்தக்காட்டுத் தீயால்5 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாகியுள்ளன. சுமார் 700க்கும் அதிகமான குடும்பங்கள் வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளன. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்தக் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இடி மின்னல் காரணமாக காட்டில் தீப்பற்றியதாக வனத்துறை தெரிவித்துள்ளது. சுமார் 13ஆயிரத்துக்கும் அதிகமானவ தீயணைப்பு மற்றும் வனத்துறை தீயை அணைத்து வருகின்றனர்.