உலகம்

ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முகத்திரை அணிந்தால் அபராதம்

ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முகத்திரை அணிந்தால் அபராதம்

webteam

ஆஸ்திரியா நாட்டில் முகத்திரை அணிய விதிக்கப்பட்ட தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியன்னா நகரில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் முகத்தை மூடியபடி புர்கா அணிந்து பொது இடங்களில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதேபோன்ற தடை ஆஸ்திரியா நாட்டில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி பொது இடங்களில் முகத்தை மூடியபடி ஆடை அணிந்து வந்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடை இஸ்லாமியர்ளின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தடையை நீக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் வியன்னா நகரம் பரபரப்பாக காணப்பட்டது.