உலகம்

பாக். காவல்துறைக்கு முதல் முறையாக இந்து பெண் தேர்வு

பாக். காவல்துறைக்கு முதல் முறையாக இந்து பெண் தேர்வு

webteam

பாகிஸ்தானில் முதன்முறையாக இந்து பெண் ஒருவர், காவல்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் வசித்துவருகின்றனர். குறிப்பாக சிந்து மாகாணத்தில் அதிகமான இந்துக்கள் வசிக் கின்றனர். இந்த மாகாணத்தைச் சேர்ந்த இந்து பெண், புஷ்பா கோலி. இவர், மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத் திய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்த தகவலை மனித உரிமைகள் ஆர்வலர் கபில் தேவ் என்பவர் ட்விட்டரில் தெரிவித்தார். "போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சிந்து மாகாணத்தில் காவல்துறையில் சேரும் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை புஷ்பா கோலி பெற்றுள்ளார். பெண்களுக்கு அதிக அதிகாரம்” என கூறியுள்ளார்.

கடந்த ஜனவரியில் சுமன் பவன் போடானி என்ற இந்து பெண், நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், புஷ்பா கங்குலி, இப்போது காவல்துறை அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.