உலகம்

குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு பாக்., பிரதமர் வரவேற்பு

குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு பாக்., பிரதமர் வரவேற்பு

webteam

குல்பூஷண் ஜாதவை விடுவிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடாதது வரவேற்கத்தக்கது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்காக உளவு பார்த்தார் எனக் கூறி இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கைது செய்த பாகிஸ்தான், அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடிய நிலையில் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்யும்படி பாகிஸ்தானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், குல்பூஷண் ஜாதவை சர்வதேச நீதிமன்றம் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கவில்லை, சிறையில் இருந்து விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் கூறவில்லை. இது வரவேற்புக்குரியது எனத் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்டவர் ஜாதவ் எனக் கூறியுள்ள இம்ரான் கான், சட்டரீதியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக டிவிட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் அரசு, குல்பூஷண் ஜாதவை விடுவிக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி இருந்தது.