உலகம்

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட நேரிடும் - எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட நேரிடும் - எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை

ச. முத்துகிருஷ்ணன்

போலிக் கணக்குகளின் விவரங்களை முழுமையாக தராவிட்டால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என்று எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவை முழுமையாக வழங்கத் தவறினால், ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடுவேன் என்று எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ட்விட்டர் தனது கடமைகளுக்கு இணங்க வெளிப்படையாக மறுக்கிறது. இது போலிக் கணக்குகள் பற்றிய தரவின் மூலம் மஸ்க்கின் சொந்த பகுப்பாய்வு எதைக் கண்டறியும் என்ற கவலையின் காரணமாக ட்விட்டர் நிறுவனம் தரவை நிறுத்தி வைக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று கடிதத்தில் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் எலான் மஸ்க்.

ட்விட்டர் தனது கடமைகளில் இருந்து மீறுவதாகவும் இணைப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் எலான் மஸ்க்-க்கு உண்டு என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் மாதம், போலி கணக்குகளின் விகிதத்தில் தரவுகளை வழங்க வேண்டும் என்று கூறி ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை "தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக" மஸ்க் அறிவித்து இருந்தார். தற்போது அவர் எழுதியுள்ள கடிதத்தில் இருந்து ட்விட்டரை வாங்கும் அவரது முடிவு கேள்விக்குறியாகி உள்ளது.