உலகம்

கொரோனா எதிரொலி: ஹூண்டாய் கார் தொழிற்சாலை மூடல்

கொரோனா எதிரொலி: ஹூண்டாய் கார் தொழிற்சாலை மூடல்

jagadeesh

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவன ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.

உலகின் 5 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயின் உற்பத்தி ஆலை தென்கொரியாவின் உல்சானில் நகரில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சுமார் 14 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் சீனாவிற்கு அடுத்த படியாக தென்கொரியாவிலும் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருவதால் ஹூண்டாய் கார் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2, ‌788 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ‌44 ‌பேர்‌‌ உயிரிழந்திருப்பதாக சீன ‌‌அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 327 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக‌ கூ‌றப்பட்டுள்ள‌து‌.‌ இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,824 ஆக அதிகரித்துள்ளது.

‌இதனிடையே, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதை தடுத்து நிறுத்த அதிதீவிர நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய நிலை வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.