உலகம்

இந்தோனேஷியாவில் கொரோனா 2ஆம் அலை தாக்கம்: இரவு பகலாக கல்லறைகளை அமைக்கும் பணி தீவிரம்

இந்தோனேஷியாவில் கொரோனா 2ஆம் அலை தாக்கம்: இரவு பகலாக கல்லறைகளை அமைக்கும் பணி தீவிரம்

Sinekadhara

இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்காக ஏராளமான கல்லறைகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்தோனேஷியாவில் இரண்டாம் கொரோனா அலையின் தாக்கம் தற்போது உச்சத்தை அடைந்துள்ள நிலையில், தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். தினசரி 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், மிகப்பெரிய அளவில் கல்லறைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு இடமில்லாததால், இரவு பகலாக கல்லறைகளை அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.